இரவோடு இரவாக ஜனாதிபதியை சந்தித்த சம்­பந்­தன்: நியா­ய­மான வலி­யு­றுத்தல் சாத்தியமாகுமா?

ஆசிரியர் - Admin
இரவோடு இரவாக ஜனாதிபதியை சந்தித்த சம்­பந்­தன்: நியா­ய­மான வலி­யு­றுத்தல் சாத்தியமாகுமா?

தேசிய அர­சாங்­கத்தில் ஏற்­பட்­டுள்­ள­ நெ­ருக்­கடி நிலை தேசிய பிரச்­சினை தீர மக்கள் வழங்­கிய ஆணையை எவ்­வ­கை­யிலும் பாதித்­து­ வி­டக்­கூ­டாது என்று எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் தலை­வ­ருமான இரா. சம்­பந்தன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டமும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டமும் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார்.


வெள்­ளிக்­கி­ழமை இரவு ஜனா­தி­ப­தியை அவ­ரது உத்­தி­யோ­கபூர்வ வாசஸ்­த­லத்தில் சந்­தித்த எதிர்க்­கட்சித் தலைவர் தற்­போது ஏற்­பட்­டுள்ள அர­சியல் நெருக்­கடி குறித்து விரி­வாக பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். இரு­வரும் தனித்து இந்த சந்­திப்­பினை மேற்­கொண்­டி­ருந்­தனர்.


இதன்­போது, 2015 ஆம் ஆண்டு ஜன­வ­ரியில் இந்த நாட்டு மக்கள் தெளி­வான ஆணை­யினை உங்­க­ளுக்கு வழங்­கி­யுள்­ளனர். அந்த ஆணை­யினை நிறை­வேற்­ற­வேண்டும். அதனை நிறை­வேற்­றக்­கூடிய அர­சாங்கம் ஒன்றே அமைக்­கப்­ப­ட­வேண்டும். மக்­க­ளு­டைய இந்த ஆணைக்கு விரோ­த­மா­ன­வர்கள் அர­சாங்­கத்தில் இருந்தால் அந்த ஆணையை நிறை­வேற்ற முடி­யாது போய்­விடும் என்று சம்­பந்தன் ஜனா­தி­ப­திக்கு எடுத்­துக்­கூ­றி­யி­ருக்­கின்றார்.


மேலும், 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8ஆம் திகதி இந்த நாட்டு மக்­களால் ஜனா­தி­ப­திக்கு ஒரு ஆணை வழங்­கப்­பட்­டது. அந்த ஆணை ஜன­நா­ய­கத்தை உறு­தி­செய்­வது, சர்­வா­தி­காரப் போக்கை இல்­லா­தொ­ழிப்­பது, தேசிய பிரச்­சி­னைக்கு ஒரு நியா­ய­மான நிரந்­த­ர­மான தீர்வைக் கண்டு சமத்­து­வத்தை நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது, மனித உரி­மைகள்-, அடிப்­படை உரி­மை­களை உறு­திப்­ப­டுத்­து­வது, சட்டம் ஒழுங்கு நிறை­வேற்­றப்­ப­டு­வது, சுதந்­தி­ர­மான நீதியை ஏற்­ப­டுத்­து­வது என்­ப­வற்றை உள்­ள­டக்­கி­ய­தா­கவே இந்த மக்கள் ஆணை அமைந்­தி­ருந்­தது. அந்த ஆணையை அவர் நிறை­வேற்­ற­வேண்டும். எனவும்,


தமிழ் மக்கள் ஜனா­தி­பதி மீது நம்­பிக்கை வைத்து ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது பெரு­வா­ரி­யான வாக்­கு­களை அவ­ருக்கு வழங்­கி­யுள்­ளனர். அந்த ஆணையை அவர் நிறை­வேற்­றுவார் எனக் கரு­தியே அவ­ருக்கு தமிழ் மக்கள் வாக்­க­ளித்­தனர். இந்த நிலையில் அவர்கள் ஏமாற்­றப்­ப­டக்­கூ­டாது. தமிழ் மக்கள் ஏமாற்­றப்­ப­டாமல் இருக்­கக்­கூ­டிய ஒரு அர­சாங்­கத்தை அமைக்­க­வேண்டும் என்று இந்த சந்­திப்பில் தான் வலி­யு­றுத்­தி­ய­தா­கவும் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு