நல்லாட்சி அரசாங்கம் சொன்னவற்றில் எதனையும் செய்யவில்லை. இரண்டரை வருடங்களின் பின் வருத்தப்படுகிறார் மாவை சேனாதிராஜா.

ஆசிரியர் - Editor I
நல்லாட்சி அரசாங்கம் சொன்னவற்றில் எதனையும் செய்யவில்லை. இரண்டரை வருடங்களின் பின் வருத்தப்படுகிறார் மாவை சேனாதிராஜா.
 

நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றாததையிட்டு நாங்கள் பெரிதும் கவலையடைந்திருக்கின்றோம். நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக ளை தீர்ப்பதில் மெத்தனப்போக்கை கடைப்பிடித்திருக்கின்றது. மேற்கண்டவாறு நாடர்ளுமன்ற உறுப்பினரும், தமிழரசு  கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா கூறியிருக்கின்றார்.


மார்ட்டின் வீதியில் உள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இன்று காலை ஊடகவியலாள ர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இத ன்போது மேலும் அவர் கூறுகையில்,


ஜனாதிபதி தேர்தல் காலத்தில் எமது மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் வாக்களித்தார்கள். இ தனால் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இதன் ஊடாக இனப்பிரச்சினை தீர்பு மற்று ம் போரால் அழிந்த எமது தேசத்தை கட்டியெழுப்புதல் பொன்ற பல விடயங்கள் கோரிக் கையாக முன்வைக்கப்பட்டது. ஆனால் இந்த அரசாங்கம் அவற்றை செய்து கொடுக்க தவறி


யிருக்கின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் மெத்தனபோக்கை கொண்டிருக்கி ன்றது. இதனால் நாம் கவலையடைந்துள்ளோம். மேலும் இலங்கை அரசும் இணங்கி கொண் டுவந்த ஐ.நா தீர்மானத்தையும் அவர்கள் நடைமுறைப்படுத்த தவறியிருக்கிறார்கள். இதனால் எம்மைபோல் சர்வதேச இராஜதந்திரிகளும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளார்கள். நாங்கள் எந்தn


வாரு முன்னேற்றத்தையும் காணவில்லை. அதாவது எங்கள் எதிர்பார்ப்புக்கள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இதனால் எங்கள் மக்களுக்கு மிகுந்த கோபம் உண்டாகியிருக்கின் றது. உள்ளுராட்சி சபை தேர்தலின் பின்னர் தென்னிலங்கையில் உருவாகியிருக்கும் அரசிய ல் குழப்பம் மக்களை மேலும் சோர்வடைய வைத்திருக்கின்றது. மேலும் மஹிந்த ராஜபக்ஸ


வின் வெற்றி எமது மக்களுக்கு எந்தவகையிலும் நன்மை தராது. மேலும் நல்லாட்சி அரசாங் கம் உடையுமாக இருந்தால் நாங்கள் இரண்டரை வருடங்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியி ல் முடியும். இவ்வாறு தமிழ் மக்கள் இந்த தடவையும் ஏமாற்றப்பட்டால் சர்வதேச மட்டத்தி லிருந்து எவ்வாறன தீர்வினை எடுப்பது என்பது தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து வருகிறோ


ம்.


ஜெனீவா தீர்மானம் தொடர்பாக.


ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படவே ண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறுவது அரசாங்கத்தை பாதுகாப்பத ற்காகவென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவதன் ஊடாக அவர் எல்லாவற்றையும் எதி ர்த்தும், எதிர்க்க சொல்லியும் பழக்கப்பட்ட ஒருவர் என்பதை தெளிவாக காட்டி நிற்கின்றது.


தமிழ் மக்களுடைய ஆணையைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை கNஐந்திரகுமார் எப்பொழுதும் அவர் ஆதரித்தவரல்ல. ஐ.நா வில் மனித உரிமைகள் பிரேரனை வந்த போது அதனை அவர்கள் தீவிரமாக எதிர்தவர்கள். இந்த நாட்டின் ஐனாதிபதித் தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டுமென்று எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் தான் இப்போது இவ்வாறு கூறுகின்றனர்.


மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் திட்டவட்டமாக அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றே கூறி வருகின்றோம். நடைமுறைப்படுத்தாத தீர்மானங்கள் சம்மந்தமாகவும் நம்பிக்கையளிப்பதான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்றதையும் சொல்ல வேண்டிய கடப்பாடுகள் எமக்கிருக்கின்றதன் அடிப்படையிலையே அதனைக் கூறியுள்ளோம்.


அதைச் சொல்லாமல் விட்டால் கூட்டமைப்ப ஒன்றும் பேசவில்லை. அரசிற்கு ஆதரவாக இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால்கூட்டமைப்ப அரசிற்கு எதிராகத் தான் வாக்குமூலமளித்துள்ளது. இந்த மார்ச் மாதத்திற்குள் இன்னும் பல சந்திப்புக்கள் எங்களுக்கு இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையக குற்றவியல் தொடர்பான குழுவொன்று இங்கு வந்திருந்தது அனைவருக்கும் தெரியும்.  


இதன் போது ஐனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்து மனித உரிமைகள் தீர்மானத்தை நிறைவேற்றாது இழுத்தடிக்கிறியல். இந்த தீர்மானமத்தை நாட்டுக்குள் நிறைவேற்றாது விட்டால் வெளிநாட்டில் நாங்கள் தீர்மானிக்க வேண்டி வருமென்றும் கூறியிருக்கின்றனர். இந்தப் பலம் எங்களுக்கு வேறு எங்கிருந்தும் எங்களுக்கு வரப்போவதில்லை. ஆனபடியால் கூட்டமைப்பு தொடர்ந்தும் அத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென வற்புறுத்துவதை விட வேறு எதன் மூலம் எதை நாங்கள் முன்னெடுப்பதன் மூலம் தமிழ் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கலாம்..


எமக்கிருக்கும் ஒரே ஒரு பலம் சர்வதேசம் தான். இவ்வாறு அரசுக்கு எதிராக ஐ.நா.வை வற்புறுத்துவதன் மூலம். அரசாங்கத்தை பாதுகாக்கிறோம் என்பது கட்டியெழுப்பட்ட கட்டுக்கதை. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அரசு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கேட்பது அரசாங்கத்தைப் பாதுகாப்பதா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு