இரகசிய வாக்கெடுப்பிற்கு முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் சவால்!

ஆசிரியர் - Admin
இரகசிய வாக்கெடுப்பிற்கு முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் சவால்!

யாழ் மாநகரசபை உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களில் ஒரு இரகசிய வாக்கெடுப்பிற்கு இணங்குங்கள் யார் ஆட்சியமைக்கின்றார்கள் என்று பார்ப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சவால் விடுத்துள்ளார்.

மாற்றுக் கட்சிகளுக்கு ஆதவளித்தால் பதவி நீக்கம் செய்யப்படுவீர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் புதிதாக உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடும்வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளமை தொடர்பில் இன்று (17.02.2018) சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.

அங்கு மேலும் குறிப்பிட்ட அவர்,

ஒரு பயமும் இல்லாமல் இரகசிய வாக்கெடுப்பிற்கு திரு.சோனாதிராஜா இணங்கினால் யார் ஆட்சியமைக்கப்போவது? யாருக்கு பெரும்பான்மை இருக்கிறது? அவருடைய கட்சி உறுப்பினர்களே அவர்களுக்கு வாக்களிப்பார்களா என்ற உண்மை தெரிந்துவிடும்.
ஆனால் பயத்தின் அடிப்படையில் இரகசிய வாக்கெடுப்பிற்கு இணங்காமல் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மிரட்டும் தொனியில் கூட்டமைப்புக்கு எதிராக வாக்களித்தால் உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று மிரட்டி தங்களுடைய வேட்பாளர்களுக்கு எதிராக ஒரு பயங்கரவாதத்தைத் திணித்துத்தன் தங்களுடைய வேட்பாளர்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயல்கின்றார்கள்.
நீங்கள் ஏன் பயப்படுகின்றீர்கள். ஒரு இரகசிய வாக்கெடுப்பிற்கு இணங்குங்கள் யார் ஆட்சியமைக்கின்றார்கள் என்று பார்ப்போம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மாறிவந்து தமிழ்த் தேசியப் பேரவைக்கு வாக்களிப்பார்கள் என்ற அச்சத்தினாலேயே அவர்கள் இரகசிய வாக்கெடுப்பை நிராகரித்து தமது வேட்பாளர்களை மிரட்டும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். கூட்டமைப்பின் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற உறுப்பினர்கள் அவர்களுக்கு எதிராக வாக்களிக்க தயாராகவே இருக்கின்றார்கள் என்பதற்கு இது ஒன்றே போதும்” – என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு