விக்னேஸ்வரனுக்கு வலை வீசுகிறது த.தே.ம.முன்னணி

ஆசிரியர் - Editor I
விக்னேஸ்வரனுக்கு வலை வீசுகிறது த.தே.ம.முன்னணி


வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து நேர்மையான, உறுதியான, அடிப்படைக் கொள்கையில் விட்டுக்கொடுப்பு இல்லாத மக்கள் நலன் சார்ந்த அரசியலை செய்யக் கூடிய ஒரே ஒரு தரப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டும்தான் என்கிறார் அக்கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.


இதனை முதலமைச்சரும் நன்கு அறிந்துகொண்டுள்ளார். அதற்கேற்க அவர் முடிவெடுப்பார் எனவும் அவர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்து கஜேந்திரகுமார் பேசினார்.


இதன்போது உள்ளுராட்சி சபைத் தேர்தலின் பின்னர் முதலமைச்சரை கஜேந்திரகுமார் சந்தித்துப் பேசியமை தொடர்பிலும் வட மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு தொடர்பிலும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 


இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொள்ளை ரீதியில் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கும் எமக்கும் நெருங்கிய உறவு எற்கனவே உண்டு. கடந்த கால தேர்தலில் நாங்கள் போட்டியிட்ட போது அவர் வெளியிட்ட அறிக்கைகள் எமக்கு நேரடியாக ஆதரவு தராவிட்டாலும், உண்மையை வெளிப்படுத்துவதாக இருந்தன. 


வடமாகாண முதலமைச்சர் முன்வைத்துவரும் கொள்ளையில் தெளிவாக இருப்பாரானால் அரசியல் ரீதியாக செயற்படுவதற்கு அவருக்கு இருக்கும் ஒரே ஒரு தெரிவு தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டும்தான். வேறு எந்த ஒரு தெரிவும் அவருக்கு கொள்கை அடிப்படையில் இருக்க முடியாது எனவும் கஜேந்திரகுமார் கூறினார்.


இது முதலமைச்சருக்குத் தெரியும். அவர் முடிவுகளை எடுப்பார். நாங்கள் வர்புறுத்த முடியாது எனவும் அவர் மேலும் கூறினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு