யாழ்.மாவட்டத்திலுள்ள உணவகங்கள், ஹோட்டல்கள், திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள் கவனத்திற்கு..! பிரதி பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திலுள்ள உணவகங்கள், ஹோட்டல்கள், திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள் கவனத்திற்கு..! பிரதி பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல்..

யாழ்.மாவட்டத்திலுள்ள உணவகங்கள், ஹோட்டல்கள், திருண மண்டபங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும். உரிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

மேற்கண்டவாறு யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மகேஸ் சேனாரட்ண கூறியுள்ளார். நேற்றைய தினம் தொடக்கம் நாடு முழுவதும் கட்டுப்பாடுகளுடன் வழமைக்குத் திரும்பியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டமும் 

ழமைக்குத் திரும்பியுள்ளதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இதனடிப்படையில் பலரின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்கள், நட்சத்திர விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் போன்றவை 

புதிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொலிஸார் அறிவுறுத்தலுக்கு அமைய திறக்கப்பட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளோம். எனவே இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் 

சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்களுக்கு அமைய தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அதாவது தமது நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் கட்டாயமாக முகக்கவசம் 

மற்றும் கையுறைகளையும் கட்டாயமாக அணிய வேண்டும். சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்றி சமூக இடைவெளியிணையும் பேணியே பொது மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.

இந்த நிறுவனங்கள் பொலிஸாரினால் கண்காணிக்கப்படும் போது எவராயினும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதவிடத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த எடுப்படும் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு