யாழ்.காங்கேசன்துறையில் பொலிஸார் மீது சரமாரி வாள்வெட்டு..! பொலிஸார் குவிக்கப்பட்டு இருவர் கைது, நேற்று இரவு தொடக்கம் பதற்றம்..

ஆசிரியர் - Editor
யாழ்.காங்கேசன்துறையில் பொலிஸார் மீது சரமாரி வாள்வெட்டு..! பொலிஸார் குவிக்கப்பட்டு இருவர் கைது, நேற்று இரவு தொடக்கம் பதற்றம்..

யாழ்.காங்கேசன்துறை- நகுலேஸ்வரம் கொலனி பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலை தடுக்க சென்ற பொலிஸார் மீது சரமாரி வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கின்றது. 

இந்த சம்பவத்தில் காங்கேசன்துறை உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மீது சரமாரி வாள்வெட்டு நடாத்தப்பட்டிருக்கும் நிலையில் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. பின்னர் அந்த பகுதியில் நடாத்தப்பட்ட தேடுதலில், 

வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன்னர் இரு கோஸ்டிகளுக்கிடையல் நடந்த வாள்வெட்டு மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்

Radio
×