டுபாயில் இருந்து வெறும்கையுடன் திரும்பியது பொலிஸ் குழு! - தப்பினார் உதயங்க

ஆசிரியர் - Admin
டுபாயில் இருந்து வெறும்கையுடன் திரும்பியது பொலிஸ் குழு! - தப்பினார் உதயங்க

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை நாட்டுக்குத் திருப்பியழைத்து வருவதற்காக டுபாய் சென்ற ஏழு பேர் கொண்ட சிறப்புக் குழுவினர் நேற்று வெறுங்கையுடன் நாடு திரும்பியதாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. 2006ஆம் ஆண்டு ரஷ்யாவிடம் இருந்து ‘மிக்’ ரக விமானங்களைக் கொள்வனவு செய்ததில் நிதி மோசடி செய்ததாக உதயங்க மீது வழக்குப் பதிவாகியுள்ளது. இந்த வழக்கின் கீழ் அவருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் அமெரிக்கா செல்ல முயற்சித்தார்.


இதனிடையே அவரைக் கண்டுபிடிக்கும் வகையில் ‘நீல அறிவிப்பு’ ஒன்று சர்வதேச பொலிஸ் நிறுவனமான இன்டர்போலுக்கு அனுப்பப்பட்டதையடுத்து, டுபாயில் வைத்து உதயங்க கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை நாட்டுக்குத் திருப்பியழைத்துவரும் முகமாகவே ஏழு பேர் கொண்ட குழு டுபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. எனினும் 9ஆம் திகதி தாம் விடுவிக்கப்பட்டதாக உதயங்க தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு