யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை..! வடக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளாராம்..

ஆசிரியர் - Editor
யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை..! வடக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளாராம்..

யாழ்.மாவட்டத்தில் கொரோனாவுக்கு பின்னர் தற்போது டெங்கு காய்ச்சலின் தாக்கம் மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கியிருக்கும் நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்திற்குள் 7 இடங்களில் டெங்கு நுளம்பு பெருகும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

வடமாகாணத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரிகளை சந்தித்த வடமாகாண ஆளுநர் மாகாணத்தின் சுகாதார நிலமைகள் தொடர்பாக கேட்டறிந்துள்ளார். இதன்போதே மருத்துவர் ஒருவர் மேற்படி விடயத்தினை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றார். 

இதன்போது யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் டெங்கு நுளம்பு பெரும் வகையில் சுற்றுசூழல் காணப்படுவதுடன், போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிலர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாகவும் குறித்த மருத்துவர் ஆளுநருக்கு கூறியிருந்ததுடன், 

மாவட்ட பூச்சியியல் பிரிவினர் நடாத்திய ஆய்வில் வைத்தியசாலைக்குள் டெங்கு நுளம்பு பெருக்கம் காணப்படுவது உறுதியானதாகவும், சுட்டிக்காட்டியிருக்கின்றார். இதனடிப்படையில் கருதது தொிவித்த ஆளுநர் உடனடியாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டெங்கு நுளம்பு பெருக்கத்தை 

வைத்தியசாலை சுற்றாடலில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் பிராந்திய சுகாதாரசேவை பணிப்பாளர் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ஆளுநர் உத்தரவிட்டிருக்கின்றார். 

இது குறித்து யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த தகவல் உறுதிப்படுத்தப்படாத ஊகத்தின் அடிப்படையிலான தகவல் என கூறியுள்ளார். 

Radio
×