இந்து ஆலயங்கள் மீதான அடாவடி அமைதியின்மைக்கு வாய்ப்பாக அமையும் : பொது மக்கள் மகஜர்

ஆசிரியர் - Admin
இந்து ஆலயங்கள் மீதான அடாவடி அமைதியின்மைக்கு வாய்ப்பாக அமையும் : பொது மக்கள் மகஜர்

மன்னார் மாவட்டத்தில் இந்து ஆலயங்கள் மீதான அடாவடித்தனம் தொடரும் பட்சத்தில் அது இன, மத முறுகலை உண்டாக்கி சமாதான, சகவாழ்வு கேள்விக் குறியாகும் நிலை ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

ஆகவே இவற்றை தடுத்து நிறுத்துவதற்கு ஆவன செய்ய வேண்டும் என மாவட்ட இந்து மக்கள் சார்பில் அரசாங்க அதிபரிடம் மகஜர் மூலம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மன்னாரிலுள்ள இந்து ஆலயங்களில் இருந்த திருவுருவச் சிலைகள் களவாடப்பட்டும் உடைத்து சேதமாக்கப்பட்டதையும் கண்டித்து நேற்றுமுன்தினம் காலை மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள் பதாகைகளை ஏந்தியவாறு கண்டனம் தெரிவித்து மாவட்ட அரசாங்க அதிபரிடமும், மன்னார் பிரதேச செயலாளரிடமும் மகஜர்களை கையளித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு