சுதந்­திரக் கட்சிக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு தயார் : கூட்டு எதி­ர­ணியின் தீர்­மானம்

ஆசிரியர் - Admin
சுதந்­திரக் கட்சிக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு தயார் : கூட்டு எதி­ர­ணியின் தீர்­மானம்
உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலின் பின்னர் தேசிய அர­சி­யலில் ஏற்­பட்­டி­ருக்கும் தளம்பல் நிலையின் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தலை­மை­யி­லான அர­சாங்கம் ஒன்றை  அமைப்­ப­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்டும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த தலை­மை­யி­லான   கூட்டு எதிர்க்­கட்சி  தீர்­மா­னித்­துள்­ளது.

மேலும், உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் நல்­லாட்சி அர­சாங்கம் படு­தோல்­வி­ய­டைந்­துள்­ளது. அர­சாங்கம் கடந்த மூன்று ஆண்­டுகள் முன்­னெ­டுத்த கொள்கைத் திட்­டத்தை சகல மக்­களும் நிரா­க­ரித்­துள்­ளனர். அத­னா­லேயே குறு­கிய காலத்தில் அமைக்­கப்­பட்ட  ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவை பெரு­வெற்­றி­யீட்ட வைத்­துள்­ளனர்.

மக்­களை ஏமாற்றும் வகை­யி­லான பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்தே நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­தது. அதனை மக்கள் தற்­போது நன்கு புரிந்­து­கொண்­டுள்­ளனர்.

எனினும் சூழ்ச்சி மூலம் தொடர்ந்தும் ஆட்­சியைத் தக்­க­வைத்­துக்­கொள்­வ­தற்கு பிர­யத்­தனம் காட்டி வரு­கி­றது.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி கூட்டு எதிர்க்­கட்­சி­யு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளது. இருந்­த­போ­திலும் நாம் எமது நிலைப்­பாட்­டி­லி­ருந்து விலகப் போவ­தில்லை.

எனவும் தேர்­த­லுக்கு முன்­னரே ஐக்­கிய தேசியக் கட்சி அங்கம் வகிக்கும் அர­சாங்­கத்தில்  நாம்  ஒரு­போதும் அங்கம் வகிக்­கப்­போ­வ­தில்லை எனவும் அக்கட்சியால் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு