தமிழ்தேசிய கூட்டமைப்பிடமிருந்து எதிர்கட்சி தலைவர் பதவி பறிக்கப்படும் நிலை...!

ஆசிரியர் - Editor
தமிழ்தேசிய கூட்டமைப்பிடமிருந்து எதிர்கட்சி தலைவர் பதவி பறிக்கப்படும் நிலை...!


தமிழ்தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சி அந்தஸ்த்தை இழக்கும் அபாயம் உருவாகியிருப்பதாக சிங்கள ஊ டகம் ஒன்றை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது. சிறீலங்கா சுதந்திர கட்சி தேசிய அரசி லிருந்து வெளியேறி எதிர்கட்சி வரிசையில் அமருவதற்கு தீர்மானித்திருப்பதே தமிழ்தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சி அந்தஸ்த்தை இழப்பதற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 


நாடாளுமன்ற தேர்தலில் அதிகபடியான ஆசனங்களை பெறும் கட்சியே ஆட்சியை அமைக்கும். அதற்க டுத்தபடியாக ஆசனங்களை பெறும் கட்சியின் தலைவருக்கே எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கப்படும். ஆனால் 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப் பு 

16 ஆசனங்களை கைப்பற்றியிருந்தது. அதே சமயம் மஹிந்த ராஜபக்ஷ 


தலமையில் களமிறங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 42.38 வீதமான வாக்குகளுடன் 95 ஆசனங்கi ள கைப்பற்றியிருந்தது. இதனால் எதிர்கட்சி தலைவர் பதவி தமக்கு வழங்கப்படவேண்டும் என மஹிந்த அணி கோரியிருந்தது. இதற்காக அப்போது போராட்டங்களும் நடாத்தப்பட்டன. ஆனாலும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கே எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறா


ன நிலையில் தற்போது கூட்டரசாங்கத்தில் இருந்து சிறீலங்கா சுதந்திர கட்சி வெளியேறி எதிர்கட்சி வ ரிசையில் அமருமாக இருந்தால் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வசம் உள்ள எதிர்கட்சி தலைவர் பதவியும் பறிக்கப்படும். இந்நிலையில் எதிர்கட்சி தலைவராக நிமால் சிறீபால டீ சில்வாவும், ஜே.பி.யின் வசம் இரு ந்த பிரதம கொறடா பதவி தினேஸ் குணவர்த்தனவுக்கும் வழங்கப்படும் 


சாத்தியங்கள் உள்ளதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.