தமிழ்தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் ஒன்றிணைவது அத்தியாவசியம்...

ஆசிரியர் - Editor
தமிழ்தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் ஒன்றிணைவது அத்தியாவசியம்...

தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இங்கும் கட்சிகள் ஒன்றிணைந்து பயணிக்கவேண்டிய அத்தியாவசியமான தேவை எழுந்திருக்கின்றது. இந்த கோரிக்கை தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே நாங்கள் வெ ளியிட்டிருக்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். 

உள்ளுராட்சி சபை தேர்தலின் பின்னர் தமிழ்தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் ஒன்றிணையவேண் டும் என்னும் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இந்த கோரிக்கை தொடர்பாக ஊடகங்களுக்கு பதிலளிக் கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். 

இது தொடர்பாக சுமந்தரன் மேலும் கூறுகையில், உள்ளுராட்சி சபை தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே தெற்கில் உள்ள அரசியல் நிலமைப்பாட்டை கருத்தில் கொண்டு தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இருக்கும் கட்சிகள் ஒன்றிணைவேண்டும் என நான் கூறினேன். 

அந்த கருத்து சூட்டோடு சூடாக கூறிய கருத்தாக இருக்கலாம். ஆனால் மிக அத்தியாவசியமான கருத் தாக இருக்கின்றது. நான் அப்போது கூறியிருந்த கருத்துக்கு ஆதரவாக பொது அமைப்புக்கள் மற்றும் யாழ்.ஆயர் போன்றோர் கருத்துக்கள் மற்றும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

இதேபோல் உள்ளுராட்சி சபைகளில் எந்த கட்சியும் அறுதி பெரும்பான்மை பெறாத நிலையில் அதிகபடி யான ஆசனங்களை பெற்ற கட்சிகள் ஆட்சியமைக்கவும், அவர்களுடைய மக்கள் நலன்சார் செயற்பா டுகளுக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தடையாக இருக்காது என்றார். 


Radio
×