ரணில் விக்கிரமசிங்க பதவி துறப்பாரா? தென்னிலங்கையில் குழப்பம்.

ஆசிரியர் - Editor
ரணில் விக்கிரமசிங்க பதவி துறப்பாரா? தென்னிலங்கையில் குழப்பம்.


நடைபெற்று முடிந்திருக்கும் உள்ளுராட்சி சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி கண்டி ருக்கும் பின்னடைவினையடுத்து அக்கட்சியின் உறுப்பினர்களால் ஐக்கிய தேசிய கட்சியி ன் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கடி எழுந்திருக்கின்றது. 


மேலும் நல்லாட்சி அரசாங்கம் 2020ம் ஆண்டு வரை நீடிக்க வேண்டுமானால் ரணில் விக் கிரமசிங்க பிரதமர் பதவியையும் துறக்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பி னர்களாலேயே வலியுறுத்தப்பட்டிருக்கிறது. 


இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்துக்குள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானம் ஒன் றை எடுக்கவேண்டும். எடுப்பார் என ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றது. 


நடைபெற்று முடிந்திருக்கும் உள்ளுராட்சி சபை தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலமையி லான அணி பெரும் வெற்றியை பெற்றிருக்கும் நிலையில் தெற்கில் ஆட்சி கவிழ்க்கப்படும் அளவுக்கு நிலமைகள் மாறியுள்ளது. 


இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலமைக்கும் கட்சி உறுப்பினர்களுக்குமிடையில் நேற்று மாலை விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருக்கின்றது. இதன்போது கட்சியின் எ திர்காலம் பற்றி பல விடயங்கள் பேசப்பட்டுள்ளது. 


இதன்போதே கட்சியின் தலைவருக்கு கடுமையான அழுத்தத்தை உறுப்பினர்கள் கொடுத் திருக்கின்றார்கள் என பிரதி அமைச்சர் வசந்த சேனாநாயக்க கூறியிருக்கின்றார். மேலும் ரணில் பதவியை துறப்பார் என நம்புவதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கூறியிருக்கிறார். 


மேலும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் உடனடியாக எடுக்கவேண்டிய மறுசீரமைப்பு நடவடி க்கைகள் தொடர்பாக அக்கட்சியின் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவும் கூட கருத்து தெரிவித்திருக்கின்றார். 

இதனையடுத்து ஜனாதிபதியுடன் பேச்சு நடத்திய பின்னர் தீர்க்கமான முடிவு ஒன்றிணை அறிவிப்பதாக கூறிவிட்டு ஜனாதிபதியை சந்திக்க ரணில் சென்றிருக்கின்றார். இதன்போது கட்சியின் செயலாளர் கபீர் ஹாசீம் உடன் சென்றுள்ளார். 


இதனை தொடர்ந்து நேற்றிரவு 8.45 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது ரணில் பதவி விலகவேண்டும் என சிறீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சரிகளிடம் உள்ள நிலைப்பாட்டை ஜனாதிபதி கூறியுள்ளார். 


மேலும் தாம் முடிவு ஒன்றிணை அறிவிக்க முன்னர் நீங்களே ஒரு முடிவினை அறிவியுங் கள் எனவும் ஜனாதிபதி இந்த சந்திப்பின்போது திட்டவட்டமாக கூறியிருக்கின்றார். இத னடிப்படையில் ரணில் முடிவு ஒன்றிணை எடுப்பார் என நம்பப்படுகின்றது. 


இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க கட்சி தலைவர் பதவியை துறந்தால் சபாநாயகர் கரு ஜெயசூரிய அல்லது சஜித் பிறேமதாஸ ஆகியோரில் ஒருவர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட லாம் எனவும், பிரதமர் பதவியிலும் மாற்றம் வரலாம் எனவும் நம்பப்படுகிறது. 


ரணில் பதவி துறந்தாலும் நல்லாட்சி அரசாங்கம் தொடரும் என்றும் நம்பத்தகுந்த வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன.