அவசரமாக இங்கிலாந்து புறப்பட்ட சந்திரிக்கா அம்மையார்.

ஆசிரியர் - Editor
அவசரமாக இங்கிலாந்து புறப்பட்ட சந்திரிக்கா அம்மையார்.

உள்ளுராட்சி சபை தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலமையிலான அணி வெற்றி பெற்றதன் பின்னர் தென்னிலங் கையில் ஏற்பட்டிருக்கும் சிக்கலான நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அ வசரமாக பிரித்தானியாவுக்கு பயணமாகியுள்ளதாக தெரியவருகிறது. 


சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு செல்வாக்கு மிக்க பகுதியாக காணப்பட்ட அத்தனகல்ல பிரதேசத்தில் நடைபெற் று முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க படுதோல்வியடைந்திருக்கிறா ர். இந்த தோல்வியினால் ஏற்பட்டிருக்கும் கவலையை போக்கவே சந்திரிக்கா பிரித்தானியா நோக்கி சென்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்றை மேற்கோள் காட்டி செய்திகள் வெ ளியாகியுள்ளது. 


சந்திரிக்காவுக்கு செல்வாக்கு மிக்க பகுதியாக இருந்த அத்தனகல்ல பிரதேச சபையினை இம்மு றை மஹிந்த ராஜபக்ஷ தலமையிலான பொதுஜன பெரமுன கைப்பற்றியுள்ளதுடன், அங்கு 45.91 வீதமான வெற்றியை பெற்றுள்ளது. மிகுதி 24.37 வீதமான வெற்றியை ஐக்கியதேசிய கட்சி பெற்றுள்ளது. இந்த தோல்வியினால் தனது மகன் விமுக்தி குமாரதுங்கவை அரசியலுக்குள் கொண்டுவரும் எண்ணத்தை சந்திரிக்கா கைவிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 


இதேபோல் பிரித்தானியா பயணமாகும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அங்கேயே நிரந்தரமாக தங்குவ தற்கான வாய்ப்புக்களும் உள்ளதாகவும் சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.