தமிழ்தேசிய நிலைப்பாடுள்ள கட்சிகள் இணையவேண்டும்.

ஆசிரியர் - Editor
தமிழ்தேசிய நிலைப்பாடுள்ள கட்சிகள் இணையவேண்டும்.

மஹிந்த ராஐபக்‌ஷ தலமையிலான கட்சி ந டைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர் தலில் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இ ந்நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு அடு த்த கட்டம் என்ன செய்யபோகிறது? மற்றுத் திட்டம் என்ன? என தமிழ்தேசிய கூட்டமைப் பு வெளிப்படுத்தவேண்டும். என கூறியிரு க்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன்,


அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் நகர் வுகள் குறித்து தீர்மானங்களை எடுப்பதற் காக தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கு ம் கட்சிகளை ஒண்றிணைத்து தீர்மானங் களை எடுப்பதற்கான நடவடிக்கைகளை த மிழ்தேசிய கூட்டமைப்பு எடுக்கவேண்டும். வெறுமனே இரா.சம்மந்தனும், எம்.ஏ.சுமந் திரனும் வார்த்தைகளால் கூறிக்கொண்டு இருப்பதால் பயனில்லை எனவும் சுரேஷ் பிறேமச்சந்திரன் மேலும் கூறியுள்ளார்.


உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெற்று மு டிந்திருக்கும் நிலையில் சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று காலை யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவி யலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கரு த்து தெரிவிக்கும்போதே சுரேஷ் பிறேமச் சந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இ தன்போது மேலும் அவர் கூறுகையில்,


தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக தம் மை வரித்து கொண்டிருத்த தமிழ்தேசியக் கூட்டமைப்பு நடைபெற்று முடிந்த உள்ளூ ராட்சி சபை தேர்தலில் பலவீனப்பட்டிருக்கி றது. இம்முறை மக்கள் மாற்றத்திற்காக வா க்களித்துள்ளார்கள். முன்னர் பெரும்பான் மை இடங்களை கைப்பற்றிய தமிழ்தேசிய கூட்டமைப்பு இம்முறை பலத்த பின்னடை வினை சந்தித்துள்ளது. 


வெருகல, பூநகரி போன்ற இடங்களை தவி ர்த்து சகல இடங்களிலும் பெரும்பான்மை யினை இழந்துள்ளது. இதற்கிடையில் தமி ழ்தேசிய கூட்டமைப்பை தாபன மயப்படுத் தவேண்டும் என நாம் பல சந்தர்பங்களில் கேட்டிருந்தபோதும் அதனை தமிழரசு கட்சி நிராகரித்தது. இதனால் நாம் கட்சியை விட் டு வெளியேறி தனித்து இயங்கும் தீர்மான த்தினை எடுத்தோம்.


மேலும் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தல மையிலான அணி பெரும் வெற்றியை பெ ற்றுள்ளது. இதனால் தெற்கில் ஆட்சி மாறு மா? என்னும் அளவுக்கு நிலமைகள் மாறி யிருக்கிறது. இந்நிலையில் இப்படியான மாற்றம் வந்தால் என்ன செய்வதேன தமிழ் தேசய கூட்டமைப்பிடம் திட்டம் ஒன்றி இருந் திருக்கவேண்டும். இல்லையெனில் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிக ளை ஒன்றிணைக்கவேண்டும்.


அதனடிப்படையில் அடுத்தகட்ட நகர்வு என் ன? என்பது தொடர்பில் தெளிவான தீர்மா னத்தை எடுக்கவேண்டும். இதற்கு தமிழரசு கட்சியிடம் கொள்கை மற்றுமர உபாய மாற் றம் வேண்டும். இதனை விடுத்து இரா.சம்ம ந்தனும், சுமந்திரனும் வாயால் கருத்துக்க ளை கூறிக்கொண்டிருப்பதால் பயன் எதுவு மில்லை என்றார்.