யாழ்.மாநகரசபையில் ஆட்சியமைக்க ஈ.பி.டி.பியுடன் கூட்டுவைக்கபோகும் தமிழ்தேசிய கூட்டமைப்பு.

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபையில் ஆட்சியமைக்க ஈ.பி.டி.பியுடன் கூட்டுவைக்கபோகும் தமிழ்தேசிய கூட்டமைப்பு.

தமிழ்தேசிய கூட்டமைப்பு- ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடன் இணைந்து யாழ்.மாநகரசபை யில் ஆட்சியமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றது. 


நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு அனைத்து சபைகளிலும் அறுதி பெரும்பான்மையை இழந்திருக்கின்றது. 


இந்நிலையில் யாழ்.மாநகரசபையில் 16 ஆசனங்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு கைப்பற் றியுள்ளபோதும் ஆட்சியமைக்க முடியாத நிலைய காணப்படுகின்றது. 


இதனால் தமிழ்தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கான பேச்சுக் களை தமிழ்தேசிய கூட்டமைப்பு நேற்று தொடுத்திருந்தது. 


ஆனாலும் அவ்வாறான கூட்டுக்கு சாத்தியமே இல்லை. என தமிழ்தேசிய மக்கள் முன்ன ணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார். 


இந்நிலையில் 10 ஆசனங்களை பெற்றிருக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடன் இணைந்து மாநகரசபை ஆட்சியை கைப்பற்றுவதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு முயற்சிக்கிறது. 


இதேவேளை இந்த விடயம் தொடர்பாக ஈ.ப.டி.பி வட்டாரங்கள் கூறுகையில் தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் இருந்து நேரடியாக அழைப்பு வரவில்லை. 


ஆனாலும் வேறு சிலர் ஊடாக அவ்வாறான பேச்சு வந்துள்ளதாகவும், இறுதி தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளது. 



காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு