தமிழ் மக்களுக்காக த.தே.கூ - த.தே.ம.மு இணையவேண்டும். சுமந்திரன் கூறுகிறார்.

ஆசிரியர் - Editor I
தமிழ் மக்களுக்காக த.தே.கூ - த.தே.ம.மு இணையவேண்டும். சுமந்திரன் கூறுகிறார்.

தமிழ் மக்களது பிரச்சனைகளுக்கு தீர்வொன்றை காணும் வகையில் அதற்கான தீர்வாக சமஸ்டி அடிப்படையிலான புதிய அரசியலமைப்பு ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அதே கொள்கையில் பயணிக்கின்ற  தமிழ் கட்சிகள் தற்போது ஒன்றாக பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பானது வலியுறுத்தியுள்ளது.


மேலும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாம் சில சொற்களின் அர்த்தம் தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருக்க அதே புதிய அரசியலமைப்பு நாட்டை பிரிக்க போகின்றது என்ற அடிப்படையில் அதனை சிங்கள மக்கள் நிராகரித்துள்ளார்கள்.


இந்நிலையில் மகிந்த அணியால் தெற்கில் ஏற்பட்டுத்தப்பட்டுள்ள பாரிய மாற்றத்தை கருத்தில் எடுத்து, தனிமனித விருப்பு வெறுப்புக்களை கைவிட்டு ஒரே திசையில் பயணிக்கின்ற நாம் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


நாட்டில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் முடிவுகள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டிருந்தார்.


இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,


இத் தேர்தலில் வடக்கு கிழக்கில் 8 மாவட்டங்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பானது போட்டியிட்டிருந்த்து. இவற்றில் 56 சபைகளில் போட்டியிட்ட நிலையில் அவற்றில் 40 சபைகளில் கூட்டமைப்பானது முன்னிலையிலும் உள்ளது. தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் பார்கின்ற போது வடக்கு கிழக்கில் 7 மாவட்டங்களில் கூட்டமைப்பானது மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது.


அதே நேரம் தெற்கில் பாரிய சூறாவளி ஏற்பட்டது போன்று ஐக்கிய தேசிய  கட்சி மற்றும் சிறிலங்கா சிதந்திர கட்சி போன்றன படு தோல்வியடைந்து மகிந்த அணி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் அவற்றோடு ஒப்பிடும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பானது பாரிய வெற்றியை பெற்றுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலோடு ஒப்பிட்டு பார்க்கும் போது வடக்கு கிழக்கில் யாழ்ப்பாணத்தை விட ஏனைய மாவட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான வாக்கானது அதிகரித்துள்ளது.


யாழ்ப்பாணத்தை பொறுத்த வரையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான வாக்கானது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணத்தை பொறுத்த வரையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸை பொறுத்த வரையில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு யாழில் ஏற்பட்ட பின்டைவு குறித்து நாம் ஆராய்ந்து அவற்றை களைவதற்கான நடவிடக்கையை எடுப்போம்.


மேலும் இவ் உள்ளூராட்சி தேர்தலானது தெற்கிலே ஏற்படுத்தியுள்ள மாற்றமானது தமிழ் மக்களது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதிலே பெரிடியாக வந்துள்ளது. குறிப்பாக புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை நிராகரிக்கின்ற மக்கள் ஆணையாக இத் தேர்தலை சில கட்சிகள் பிரச்சாரம் செய்திருந்தன. இருந்த போதிலும் தமிழ் மக்கள் அவ்வாறு நிராகரிக்கின்ற வகையில் வாக்கிள்காகத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு யாழில் ஏற்பட்ட பின்டைவும் அதனால் ஏற்பட்டதல்ல.


அதேபோன்று மகிந்த அணியானது குறித்த புதிய அரசியலமைப்பின் ஊடாக நாடு இரண்டாக பிளவுபடப்போகின்றது என பிரச்சாரம் செய்த நிலையில் சிங்கள மக்கள் தற்போதுள்ள அரசாங்கத்தை நிராகரிக்கின்ற வகையில் வாக்களித்துள்ளனர். அத்துடன் சிங்கள மக்களின் இவ் மாற்றத்தில் ஊழல் மோசடிகள், நிர்வாக திறன்ற்ற தனரமைகள் போன்றனவும் செல்வாக்கு செலுத்தியுள்ளன.


குறிப்பாக தெற்கில் ஏற்பட்டுள்ள இம் மாற்றமானது தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு தீர்வான புதிய அரசியலமைப்பை பெற்றுக்கொள்வதில் சவால்களை ஏற்படுத்தியுள்ளது.


இவ்வாறன  நிலையில் புதிய அரசியலமைப்பு தொடர்பாக வெளியாகியுள்ள இடைக்கால அறிக்கையிலே  நாம் சில சொற்களின் அர்த்தம் தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருக்க அதே புதிய அரசியலமைப்பு நாட்டை பிரிக்க போகின்றது என்ற அடிப்படையில் அதனை சிங்கள மக்கள் நிராகரித்துள்ளார்கள்.


எனவே தமிழ் மக்களது பிரச்சனைக்கு தீர்வொன்றை காணும் வகையில், குறித்த ஒரே கொள்கையின்பால் அதாவது சமஸ்டி அடிப்படையிலான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கொள்கையில் பயணிக்கின்ற கட்சிகள் தற்போது ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.


அந்தகையில் மகிந்த அணியால் தெற்கில் ஏற்பட்டுத்தப்பட்டுள்ள பாரிய மாற்றத்தை கருத்தில் எடுத்து, எமக்கு இடையேயான தனிமனித விருப்பு வெறுப்புக்களை கைவிட்டு ஒரே திசையில் பயணிக்கின்ற நாம் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு