கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்துவரும் யாழ்.தாவடி சிவானந்தனின் மகளுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பணிப்பாளர்..!

ஆசிரியர் - Editor
கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்துவரும் யாழ்.தாவடி சிவானந்தனின் மகளுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பணிப்பாளர்..!

யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 1வது கொரோனா நோயாளியின் மகளை சந்தித்து யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

இது குறித்த தனது சமூக வலைத்தள கணக்கில் பதிவிட்டுள்ள பணிப்பாளர், 

அப்பாவுக்கு தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலை யில் சிகிச்சை பெற்று வருகின்றார். உடல்நிலையில் சாதாரணமாகவே காணப்படுகின்றார்.

பிள்ளைக்கும் பிள்ளையின் அம்மாவுக்கும் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இருவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

பரிசோதனையின் பின்னர் அடுத்த நாள் குழந்தையை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. என பதிவிட்டுள்ளார். 

Ads
Radio
×