சுவிஸ் மதபோதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட பலர் யாழ்.அரியாலை பகுதிக்குள் தலைமறைவு..! சுகாதார பணிப்பாளர் அவசர கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
சுவிஸ் மதபோதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட பலர் யாழ்.அரியாலை பகுதிக்குள் தலைமறைவு..! சுகாதார பணிப்பாளர் அவசர கோரிக்கை..

யாழ்.அரியாலை தேவாலயத்தில் சுவிஸ் போதகர் நடாத்திய ஆராதனையில் கலந்து கொண்டிருந் த பலர் அரியாலை மற்றும் கிழக்கு அரியாலை பகுதிகளில் மறைந்திருக்கும் நிலையில், அவர்கள் தாங்களாகவே தங்களை அடையாளப்படுத்தவேண்டும். 

மேற்கண்டவாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வ ரன் கேட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக பண்ணையில் உள்ள அவருடைய அலுவலகத்தில் இ டம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சுவிஸ் போதகர் ஒருவரால் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தற்போது ஒவ்வொருவராக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுடன் நெருங்கிப் பழகிய 325 பேர் வரையிலானவர்கள் 

தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.இவ்வாறான நிலையில் தற்போது குறித்த தேவாலயத்திற்குச் சென்று இன்றுவரை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் சிலர் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வாறு இருப்பவர்கள் பற்றிய தகவல்கள் நமக்கு தெரியப்படுத்துமாறு 

கேட்கப்பட்டுள்ளன மேலும் அவர்கள் தாமாக முன்வந்து தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுமாறு இந்த சந்தர்ப்பத்திலே கேட்டுக்கொள்கின்றோம்யாழ்ப்பாண மாவட்டத்தை பொருத்தவரையில் கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் 

நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவே தனிமைப்படுத்தப்பட்டு உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு முயற்சிகளை எடுத்துள்ளோம் அந்த அடிப்படையில் தாவடியில் உள்ள ஒரு பகுதியினருக்கு 

மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளனர் மேலும் அரியாலைப் பகுதியில் உள்ளவர்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு