நட்டஈடு பெறுவதற்கா போராட்டம் நடத்துகிறோம்? - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர் கேள்வி

ஆசிரியர் - Admin
நட்டஈடு பெறுவதற்கா போராட்டம் நடத்துகிறோம்? - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர் கேள்வி

நட்டஈடு பெறுவதுக்காக நாங்கள் போராட்டம் நடத்தவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பிரசார நடவடிக்கைகளுக்காக நேற்று யாழ்ப்பாணம் சென்றிருந்த ஜனாதிபதி, காணாமலாக்கபட்டோர் என எவரும் இல்லை. எனவே காணாமலாக்கப்பட்டோரின் பெற்றோருக்கு நட்டஈடு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.


இது தொடர்பாக வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவினர்கள் கருத்து தெரிவிக்கையில், “கடந்த ஒரு வருட காலமாக உங்கள் பிள்ளைகளை விடுதலை செய்வோம் என தெரிவித்த ஜனாதிபதி, இப்போது காணாமலாக்கப்பட்ட எமது பிள்ளைகள் இல்லை என தெரிவித்திருக்கிறார்.ஜனாதிபதியுடன் எமது பிள்ளைகள் நிற்கும் ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. 


எமது பிள்ளைகளுக்கு ஜனாதிபதியால் நட்டஈடு கொடுக்க முடியுமா? நாங்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, எமது பிள்ளைகள் இல்லை என ஏன் ஜனாதிபதி தெரிவிக்கவில்லை. எமது பிரச்சினையில் சர்வதேசம் தலையிடவேண்டும். அரசாங்கத்தில் எமக்கு நம்பிக்கையில்லை. எங்களை இலங்கை அரசாங்கம் ஏமாற்றிக்கொண்டிருக்கிறது” என தெரிவித்தனர்.


இதேவேளை, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்றி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் 348 நாட்களாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Radio
×