யாழ்.மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை பிரிவு வெறுமையானது..!

ஆசிரியர் - Editor
யாழ்.மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை பிரிவு வெறுமையானது..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று சந்தேகத்தின் பெயரில் அனுமதிக்கப் பட்டிருந்தவர்கள் அனைவரும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு தொற்று இல்லை. என்பது உறுதி ப்படுத்தப்பட்ட நிலையில் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். 

இந்த தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உறுதிதிப்படுத்தி யிருக்கின்றார். யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை பிரிவில் இதுவரை 32 பேர் கொரோனா சந்தேகத்தின் பெயரில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

அனைவரும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக் கின்றது. தற்போது சிகிச்சை பிரிவு வெறுமையாகியுள்ளது. மேலும் யாழ்.மாவட்டத்தில் ஒரு நோ யாளி மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டிருக்கின்றார். 

மேலும் கொரோனா தொற்று அச்சம் நீங்கவில்லை. அதேபோல் சந்தேகத்தின் பெயரில் மேலும் சிலர் அனுமதிக்கப்படலாம் எனவும் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார். 

Radio