யாழ்.கட்டைக்காடு மீனவரின் வலையில் சிக்கிய 4 ஆயிரம் கிலோ பாரை மீன்கள்..! 4 நாள் தொழில் முடக்கத்தின் பின் அடித்த அதிஸ்டம்..

ஆசிரியர் - Editor
யாழ்.கட்டைக்காடு மீனவரின் வலையில் சிக்கிய 4 ஆயிரம் கிலோ பாரை மீன்கள்..! 4 நாள் தொழில் முடக்கத்தின் பின் அடித்த அதிஸ்டம்..

4 நாட்களுக்கு பின்னர் கடற்றொழிலுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்று காலை கடற்றொழிலுக்கு சென்றிருந்த யாழ்.கட்டைக்காடு மீனவர்களின் வலையில் சுமார் 4000 கிலோ மீன் அகப்பட்டிருக்கின்றது. 

கொரோனா அச்சம் காரணமாக நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் கடந்த 4 நாட்களாக மீன்பிடிக்கான அனுமதியும் மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றய தினம் மீன்பிடி அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

இன்று காலை யாழ்ப்பாணம்- கட்டைக்காடு மீனவர் ஒருவருடைய வலையிலேயே குறித்த 4 ஆயிரம் கிலோ பாரை மீன் சிக்கியிருக்கின்றது. 

Radio