தமிழ் மக்கள் நாங்கள் தவறி நெருப்பில் விழத் தயாரில்லை – அங்கஜன்

ஆசிரியர் - Admin
தமிழ் மக்கள் நாங்கள் தவறி நெருப்பில் விழத் தயாரில்லை – அங்கஜன்

தமிழ் மக்கள் எண்ணெய் சட்டியில் உள்ளார்கள். தவறி நெருப்பில் விழ தயார் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர சபை மைதானத்தில் நேற்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பரப்புரை கூட்டம் இடம்பெற்றது. அதில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்.

எங்களுடைய தமிழ் தலைமைகள் எங்களுக்கு உண்மையாக இல்லை. நீங்கள் எங்களுக்கு மீள் குடியேற்றத்தை முடித்து தந்து, காணாமல் ஆக்க ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்களுக்கு ஒரு முடிவினை சொல்லி, அரசியல் கைதிகளை விடுதலை செய்து , எங்கள் கிராமங்களை அபிவிருத்தி செய்து தர வேண்டும் என கோருகின்றேன்.

வடமாகாணம் ஒரு விவசாய பூமி. சிறிமாவோ காலத்தில் விவசாய புரட்சி இந்த மண்ணில் ஏற்பட்டது. மீண்டும் விவசாயாத்திற்கு செல்ல எங்கள் இளைஞர்கள் தயாரக இருக்கின்றர்கள் அதற்கு உங்கள் உதவிகளை கோரி நிற்கின்றோம்.

மக்கள் சமவுரிமைக்காக தமிழ் தலைமைகளுக்கு வாக்களித்தார்கள், ஆனால் இன்று சமவுரிமையும் இல்லை, அபிவிருத்தியும் இல்லை. எங்களை நன்றாக ஏமாற்றி விட்டார்கள்.

நாங்கள் தற்போது எண்ணெய் சட்டியில் இருக்கின்றோம். அதில் இருந்து தவறி நெருப்பில் விழ தயாராக இல்லை. நாங்கள் உங்களுடன் பயணிக்க தயாராக உள்ளோம். என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு