கொள்ளுப்பிட்டியில் சீன உணவகத்தில் குளிர்சாதனப் பெட்டிக்குள் உயிருடன் எறும்புதின்னி மீட்பு!

ஆசிரியர் - Admin
கொள்ளுப்பிட்டியில் சீன உணவகத்தில் குளிர்சாதனப் பெட்டிக்குள் உயிருடன் எறும்புதின்னி மீட்பு!

அழிந்து வரும் உயிரினமாக கருதி, பாதுகாக்கப்பட வேண்டிய விலங்காக அறிவிக்கப்பட்டுள்ள எறும்புதின்னி (Pangolin)ஒன்று கொள்ளுப்பிட்டியில் உள்ள சீன உணவகம் ஒன்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த உணவகத்தின் சமயலறையில் இருந்த குளிரூட்டிக்குள் இருந்தே இந்த எறும்புதின்னி உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த உயிரினத்தை குளிரூட்டியில் வைத்திருந்த குறித்த உணவகத்தின் பிரதான சமையல்காரரான சீன பிரஜையையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த சீன உணவகத்துக்கு அந்த எறும்பு தின்னியை சீன சமயல் காரர் கொண்டு வருவதை அப்பகுதியில் இருந்த சிலர் கண்டுள்ள நிலையில், அவர்களால் 119 என்ற அவசர அழைப்பு இலக்கத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே அந்த தகவலுக்கு அமைவாக குறித்த சீன உணவகத்தை முற்றுகையிட்ட பொலிஸார் எறும்புதின்னியை மீட்டுள்ளனர். 

4 அடி நீலமான இந்த எறும்புதின்னி, 6 கிலோ வரை எடை கொன்டது என தெரிவிக்கும் பொலிஸார் அந்த உயிரினத்தை வனஜீவரசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர். 

கைதான சீனப் பிரஜையை கோட்டை நீதிவான் முன்னிலையில் ஆஜர்செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு