யாழில் சுதந்திர தினத்தை புறக்கணித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

ஆசிரியர் - Editor II
யாழில் சுதந்திர தினத்தை புறக்கணித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் கடமையாற்றும் ஊழியர்கள் சுகந்திர தினத்தை முன்னிட்டு அலுவலகத்தை மூடி புறக்கணிப்பு செய்துள்ளமையானது தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் 70 ஆவது ஆண்டு சுதந்திர தின வைபவம் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டுள்ளது.

எனினும், யாழ். மாவட்டத்தில் சாவகச்சேரி பிரதேச சபையின் சரசாலை பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் கடமையாற்றும் ஊழியர்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டு அலுவலகத்தை மூடி புறக்கணிப்பு செய்துள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினத்தை கொண்டாடியபோதும் சுதந்திரக்கட்சி அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றாமல் அலுவலகத்தை மூடியுள்ளமை தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

குறித்த சுதந்திரக்கட்சியின் அலுவலகம் கடந்த தை மாதம்11 ஆம் திகதி சரசாலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கலந்து திறந்து வைத்துள்ளார். தொடா்ச்சியாக அலுவலகம் இயங்கி வந்த நிலையில் இன்றைய தினம் மூடப்பட்டுள்ளது.<

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு