இந்தியாவிலிருந்து பூக்கள், பழங்கள், சிற்றுண்டிகள் கொண்டுவர யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தில் தடையாம்..!

ஆசிரியர் - Editor I
இந்தியாவிலிருந்து பூக்கள், பழங்கள், சிற்றுண்டிகள் கொண்டுவர யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தில் தடையாம்..!

தமிழகத்திலிருந்து கொண்டுவரப்படும் அல்வா, மல்லிகைப்பூ மற்றும் சுவிற் வகைகள் யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தில் பயங்கரமான பொருட்களின் வகைப்பாட்டுக்குள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக பொதுமக்கள் கடும் விசனம் தொிவித்திருக்கின்றனா். 

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பரிசோதனைக் கருவி இன்மை காரணமாக பலவகையான பொருட்கள் எடுத்துச் செல்லும் அனுமதிகள் மறுக்கப்படுகின்றது. 

பரிசோதனையின் போது யாழ்ப்பாணம் விமான நிலையம் ஊடாக பயணிக்கும் பயணி தனது உடமைகளை கை மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவலம் காணப்படுகின்றது. 

இதன் காரணமாக இந்தியாவில் இருந்து இலங்கை வரும் பயணிகள் உறவுகளிற்காக எந்தவகையான பழங்கள் , பூ வகைகளும் எடுத்து வரமுடியவில்லை. 

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வரும் பயணிகள் இதே வகையான பொருட்களை கொண்டுவரும்போதும் யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையம் ஊடாக அவற்றை கொண்டுவர தடை விதிக்கப்படுகின்றது. 

அண்மையில் திருமண நிகழ்வுக்காக 25 ஆயிரம் ரூபாவிற்கு பூ வகைகளும் , மேலும் 50 ஆயிரம் ரூபாவிற்கு உணவுகள் , பழங்கள் போன்றவற்றை இருவா் கொண்டு வந்த நிலையில் கொழும்பின் ஊடாக யாழ்.வந்தவாின் பொருட்கள் வந்து சேர்ந்தபோதும் யாழ்ப்பாணம் விமான நிலையம் ஊடாக வந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இது தொடர்பில் விமான நிலைய அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேட்டபோது குறித்த வகை பொருட்களை எடுத்து வருவது தற்போது விவசாய அமைச்சு தடை செய்துள்ளது. இருப்பினும் கொழும்பில் இயந்திரம் மூலம் பரிசோதனை இடம்பெறும்போது தவறக்கூடும் எனத் தெரிவிக்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு