யாழ்.குடாநாட்டு மக்களுக்கு எச்சாிக்கை..! ஜனாதிபதி செயலகத்திலிருந்து பேசுவதாக கூறி மோசடி, இரு கிராமசேவா்கள் 39 ஆயிரம் பணத்தை இழந்தனா்..

ஆசிரியர் - Editor I
யாழ்.குடாநாட்டு மக்களுக்கு எச்சாிக்கை..! ஜனாதிபதி செயலகத்திலிருந்து பேசுவதாக கூறி மோசடி, இரு கிராமசேவா்கள் 39 ஆயிரம் பணத்தை இழந்தனா்..

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து பேசுவதாக தம்மை அடையாளப்படுத்திய மோசடிக் காரனிடம் 14 ஆயிரம் ரூபாய் பணத்தையும், 25 ஆயிரம் ரூபாய் பணத்தையும் இழந்த இரு கிராம சேவகா்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனா். 

இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உள்பட்ட கிராம சேவையாளர்களை அலைபேசியில் தொடர்பு கொண்ட நபா்கள் சிலா் தாம் ஜனாதிபதி செயலகத்திலிருந்து பேசுவதாகவும், தங்கள் பகுதியில் 

போதை ஒழிப்பு நடவடிக்கையினை மேற்கொள்வதற்காக கிராமத்திற்கு வரவுள்ளோம். எனவே அதற்கான செலவை ez cash மூலம் அனுப்புமாறும் கூறியுள்ளனா். இதனையடுத்து ஒரு கிராம சேவகா் 14 ஆயிரம் பணத்தையும், மற்றொரு கிராமசேவகா் 25 ஆயிரம் ரூபாய் 

பணத்தினையும் ez cash மூலம் அனுப்பியிருக்கின்றனா். இதேபோல் வேறு கிராமசேவகா்களுடனும் தொடா்பு கொண்டபோதும் அவா்கள் ஏமாறாமல் தப்பியிருக்கின்றனா். இந்நிலையில் பாதிக்கப்பட்டவா்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் 

இன்று முறைப்பாடு பதிவு செய்துள்ளனா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு