வடகிழக்கில் 28 ஆயிரம் வீடுகள்..! யாழ்.மயிலிட்டியில் இன்று ஆரம்பிக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor
வடகிழக்கில் 28 ஆயிரம் வீடுகள்..! யாழ்.மயிலிட்டியில் இன்று ஆரம்பிக்கப்பட்டது..

வடகிழக்கு மாகாணங்களில் 28 ஆயிரம் குடும்பங்களுக்கான கல் வீடு அமைக்கும் திட்டம் இன்று யாழ்.மயிலிட்டி பகுதியில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. 

வலி.வடக்கு மயிலிட்டியில் வீட்டுத் திட்டத்துக்கான நிகழ்வு முற்பகல் 11 மணிக்கு இடம்பெற்றது. சமூக வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான்,

நாடாளுமன்ற உறுப்பினா் அங்கஜன் இராமநாதன், யாழ்.மாவட்டச் செயலர் கே.மேகசன் மற்றும் அதிகாரிகள் வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல்லுகளை நாட்டினர்.

வடக்கு கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட 28 ஆயிரம் குடும்பங்களுக்கு நவீன கல் வீடுகள் அமைத்து வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

கொங்கிறீட் வீட்டு வசதிகள்.650 சதுர அடி வீடு, 500 லீற்றர் நீர்தாங்கி, சூரிய சக்தி பனல், மின்விசிறி, எல்,ஈ.டி. மின்விளக்குகள், சரக்கு அறை( pantry cupboard) அடுப்பு, 

மலசல கூட வசதிகள்.இந்த திட்டத்தின் முதல்கட்டமாக யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு 30 கல் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

13 லட்சத்து 80 ஆயிரம் பெறுமதியில் ஒவ்வொரு வீடும் அமைக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

Radio
×