புகைரத நிலையத்தில் முகமூடியுடன் இருமிக் கொண்டிருந்த நபரால் பதற்றம்..! ஓடி உளிந்த மக்கள்..

ஆசிரியர் - Editor I
புகைரத நிலையத்தில் முகமூடியுடன் இருமிக் கொண்டிருந்த நபரால் பதற்றம்..! ஓடி உளிந்த மக்கள்..

பதுளை புகைரத நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவா் இருமியதால் புரைத நிலை யத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.  

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் ஒருவர் முகமூடி அணிந்த நிலையில் இருமி கஸ்டப்பட்டதால் அங்கு நின்றவர்கள் அவருக்கு கொரோனா வைரஸ் COVID-19 நோயால் பாதிக்கப்படுகிறார் 

என்று நினைத்து பீதியடைந்தனர். இதையடுத்து பதுளை ரயில் நிலைய மாஸ்டர் பதுளை பொது மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தார்,அதைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து 

ஒரு மருத்துவர் மற்றும் இரண்டு பெண் தாதியர்கள் அம்புலன்சில் வந்து அந்த நபரை பரிசோதித் தனர். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், 

அங்கு அவர் மேலும் பரிசோதிக்கப்பட்டார், சோதனையின் பின்னர் COVID-19 நோய் அல்ல சாதாரண நோய் என்பதால் வெளியேற்றப்பட்டார்.

பின்னர் ரயில் நிலையத்திற்கு வெளிநாட்டவர் பயணம் செய்ய மருத்துவமனை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு