இராஜாங்க அமைச்சாின் வேஷ்டியை உருவிய துணிச்சலான பெண் அரச ஊழியா்..! அவா் பக்கமே நாம் நிற்போம் என அறிவித்தது அரசு..

ஆசிரியர் - Editor I
இராஜாங்க அமைச்சாின் வேஷ்டியை உருவிய துணிச்சலான பெண் அரச ஊழியா்..! அவா் பக்கமே நாம் நிற்போம் என அறிவித்தது அரசு..

சட்டத்தை மீறி நான் செயற்படப்போவதில்லை. சட்டத்திற்கு உட்பட்டே நான் நடப்பேன் என கூறியிரு க்கும் பெண் அரச ஊழியருக்கு அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும். அவருடைய பக்கமே அரசா ங்கம் இருக்கும். என  அமைச்சரவை பேச்சாளா் பந்துல குணவா்த்தன கூறியுள்ளாா். 

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் முன்னிலையில் அச்சமின்றி குறித்த பெண் ஊழியர் தெரிவித்த கருத்து தொடபாக, இன்று ஊடகவியலாளரினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே பந்துல குணவர்தன இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நீதியை நிலைநாட்டுகின்ற அரச ஊழியர்களை பாதுகாப்பத்தில் அரசாங்கம் முன்னிற்கும் என்றும், அதுவே அரசாங்கத்தின் கடமை என கூறினார். இருப்பினும் அந்த ஊழியர் எவரது பேச்சை கேட்க வேண்டும் என ஊடகவியலாளர் 

எழுப்பிய மற்றுமொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அமைச்சரவை பேச்சிற்கே கட்டுப்பட வேண்டும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.க டந்த திங்கட்கிழமை நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்கள 

கம்பஹா அலுவலகத்தில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இந்த கூட்டத்தின்போது, கம்பஹா அலுவலக மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி தேவானி ஜயதிலகவிற்கும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் 

ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.நீர்கொழும்பு, முன்னக்கரய, புனித நிகுலா சிங்கள கலவன் பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் இல்லாததனால் கடந்த காலத்தில் 1.4 ஹெக்டயராக காணப்பட்ட 

நீர்கொழும்பு சின்னடித்தோட்டம் தீவு பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.ஆயினும், இது அரசாங்கத்திற்கு சொந்தமான காணி என்பதால், விளையாட்டு மைதானத்தை அகற்றக் கோரி கம்பஹா மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள 

அலுவலக அதிகாரிகள் நீதிமன்றில் சட்ட நடவடிக்கை எடுத்திருந்தனர்.மீன்பிடி திணைக்களத்தினால் தீவிற்கு ஏற்றி வரப்பட்டு கொட்டப்பட்டிருந்த மண்ணையும் அகற்றுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கமைய இந்த விளையாட்டு மைதானம் தொடர்பில் 

மீண்டும் கடந்த திங்கட்கிழமை நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த தீவுடன் இணைந்ததாக மீன்பிடி திணைக்களத்தினால் களப்பு அபிவிருத்தி திட்டம் ஒன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலேயே 

இப்பிரச்சினை இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு