உண்மை தொியாமல் உள்நாட்டில் உளறுவதே தப்பு..! வெளிநாட்டில் உளறுவது மகா தப்பு, பிரதமா் மஹிந்தவுக்கு சீ.வி பதில்..

ஆசிரியர் - Admin
உண்மை தொியாமல் உள்நாட்டில் உளறுவதே தப்பு..! வெளிநாட்டில் உளறுவது மகா தப்பு, பிரதமா் மஹிந்தவுக்கு சீ.வி பதில்..

உண்மையை அறியாமல் உள்நாட்டில் பேசுவதே தவறு அதனை வெளிநாடுகளில் பேசுவது அதனை விடவும் தவறு அந்த தவறை பிரதமா் மஹிந்த ராஜபக்ச செய்யகூடாது. என வடமாகாண மு ன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியிருக்கின்றாா். 

வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விக்னேஸ்வரன் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் திருப்பி அனுப்பி விட்டார் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் தெரிவித்த கருத்து தொடர்பாக வாரம் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் போய் எங்களைக் குறை கூறி தனக்கு நற்பெயர் பெற்றுக்கொள்ள பார்க்கின்றாரா? அவர் உண்மையில் தெரியாமல் கூறினாரா அல்லது தெரிந்தும் எமக்கு மாசு கற்பிக்கக் கூறினாரா என்று தெரியவில்லை.

என்னுடைய 5 வருட பதவிக்காலத்தில் ஒரு சதத்தையேனும் நாம் மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பவில்லை. முதலாவது, 2014ம் வருடத்தில் 12,000 மில்லியன் கேட்டோம். 1,650 மில்லியன் தான் தரப்பட்டது என்று நினைக்கின்றேன். அப்படி இருக்கையில் திருப்பி 

அனுப்ப காசு எங்கு இருக்கின்றது? அதன்பின் வந்த வருடங்களில் ஒரு வருடத்தில் மூவாயிரத்து சொச்சம் தருவதாகக் கூறி பகுதி பகுதியாகத் தான் தரப்பட்டது. அதுவும் ஒரு பகுதி அடுத்த வருடத்தில் தரப்பட்டது. அந்தக் காரணத்தினால் எங்கள் செயற்றிட்டங்களும் 

பாதிக்கப்பட்டன. தாமதம் அடைந்தன. நாங்கள் பதவியில் இருந்து வந்த பின்னர் சென்ற வருடம் கூட ஒரு பாரிய தொகை மத்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருக்கின்றது. ஆகவே பணத்தை மத்திய அரசாங்கம் எமக்குத்தராமல் இருந்துவிட்டு நாம் திருப்பி அனுப்பினோம் 

என்று இந்தியாவில் சென்று எமது பிரதமர் கூறுவது விந்தையாக இருக்கின்றது. இரண்டாவது நாங்கள் உதாரணமாக 12,000 மில்லியன் கேட்டால் எமக்கு சுமார் பத்தில் ஒரு பங்கைத் தந்துவிட்டு மிகுதி அனைத்தையும் மத்திய அமைச்சர்களுக்கு தொடர்ந்து வந்த 

அரசாங்கங்கள் கொடுத்து வந்துள்ளன. அவர்கள் அந்தப் பணம் அனைத்தையும் வடக்கிற்குச் செலவிடுவதாக பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் பிரசித்தப்படுத்துவார்கள். ஆனால் நடப்பது என்ன? அவர்களுக்குக் கிடைத்த பணம் அனைத்தையும் 

வடகிழக்கு மாகாணத்திற்கு அனுப்புகின்றார்களோ என்பது ஒரு புறம் இருக்க அனுப்பப்படும் பணம் எமக்கு அனுப்பப்படுவதில்லை. அரசாங்க அதிபர்களுக்கே அனுப்புகின்றார்கள். அவர்கள் பலர் பணத்தைத் திருப்பி அனுப்புகின்றார்கள் என்று கேள்வி.

ஒருவேளை பணத்தைத் திருப்பி அனுப்புவதால் மத்தியின் கடைக்கண் பார்வை தமக்குக் கிடைக்கும் என்று அவர்கள் அவ்வாறு அனுப்புகின்றார்களோ அல்லது வேறு காரணங்களுக்காகத் திருப்பி அனுப்புகின்றார்களோ என்பது பற்றி 

அவர்களே எமக்கு அறிவுறுத்த வேண்டும். பிரதமர் பிறநாடுகளில் பேசும் போது உண்மையை அறிந்து பேச வேண்டும். உள்நாட்டில் அரசியல் மேடைகளில் பேசுவது போல் பேசக்கூடாது. மூன்றாவதாக பிரதமருக்கு 1992ம் ஆண்டின் 58ம் இலக்க சட்டம் பற்றித் 

தெரியுமோ என்று எனக்குத் தெரியவில்லை. அதன்படி 13வது திருத்தச் சட்டத்தில் எமக்கு வழங்கப்பட்ட மிகக் குறைந்த அதிகாரப் பகிர்வில் மத்திய அரசாங்கம் தமக்கென ஒரு அதிகாரப் பகிர்வொன்றை மேற்கொண்டுள்ளது.

அதாவது தந்த அதிகாரத்திலும் பாதிக்குமேல் குறித்த இந்த சட்டத்தின் ஊடாக மத்திய அரசாங்கம் எம்மிடம் இருந்து பறித்துவிட்டது. அரசாங்க அதிபர், மாவட்டச் செயலாளர், கிராம சேவகர் ஆகியோர் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண அரசாங்கத்தின் கீழ் இருந்தனர். 

மேற்படி சட்டம் அவர்களை மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக மாற்றிவிட்டது. அவர்கள் தான் பணத்தைத் திருப்பி அனுப்பி வந்துள்ளார்கள் என்று நினைக்கின்றேன். அதாவது மத்திய அரசாங்கத்தின் அலுவலர்களே எமக்கு உதவி புரிவதாக காட்டிக் கொண்டு 

எம் சார்பில் செலவிடவேண்டியிருந்த பணத்தை மத்திய அரசாங்கத்திற்கு திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். அதைப் பிரதமர் அவர்களே பரிசீலித்துப் பார்க்க வேண்டும். அபாண்டமாக எம்மேல் பழி போடுவதை அவர் நிறுத்த வேண்டும்.

அவரின் புரிதலுக்கு ஒன்றைக் கூற விரும்புகின்றேன். 2016ம் ஆண்டில் முழு இலங்கையிலும் இருக்கும் 850க்கும் மேற்பட்ட திணைக்களங்கள், அமைச்சுக்கள் ஆகியவற்றில் சிறந்த நிதி நிர்வாகத்திற்காக எனது முதலமைச்சர் அமைச்சுதான் முதற் பரிசைப் பெற்றது. 

பிரதமரின் அமைச்சேதேனும் அவ்வாறு எப்பவென்றாலும் பரிசு பெற்றதோ என்பதை அவர்தான் கூற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு