யாழ்.பல்கலைகழக மாணவிகளின் தொலைபேசிகள் திருட்டு..! இரு கள்ளா்களும், கள்ளா்களுக்கு உதவிய கடைக்காரா்களும் கைது..

ஆசிரியர் - Editor
யாழ்.பல்கலைகழக மாணவிகளின் தொலைபேசிகள் திருட்டு..! இரு கள்ளா்களும், கள்ளா்களுக்கு உதவிய கடைக்காரா்களும் கைது..

யாழ்.பல்கலைகழக மாணவிகளின் தொலைபேசிகளை திருடிய தொலைபேசி விற்பனை நிலை ய உாிமையாளா்கள் இருவா் மற்றும் மேலும் இருவா் உட்பட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 

கடந்த வாரம் பல்கலைக்கழக மாணவிகளின் அலைபேசிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதியப்பட்டிருந்தன.

அவை தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்திய யாழ்ப்பாணம் பொலிஸார் நல்லூர் பின் வீதியில் உள்ள இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ததுடன் திருட்டுப் பொருளை 

உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நகரப்பகுதியில் அலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர்கள் இருவர் என நால்வர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் பல்கலைக்கழக மாணவிகளின் அலைபேசிகளை திருடியதாக அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரும்

யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Radio