யாழ்.நாகா்கோவிலில் இன்று அதிகாலை இராணுவம் அடாவடி..! இரு இளைஞா்கள் கைது, இராணுவம் தாக்கியதில் இளைஞன் படுகாயம்..

ஆசிரியர் - Editor
யாழ்.நாகா்கோவிலில் இன்று அதிகாலை இராணுவம் அடாவடி..! இரு இளைஞா்கள் கைது, இராணுவம் தாக்கியதில் இளைஞன் படுகாயம்..

யாழ்.வடமராட்சி கிழக்கு நாகா்கோவில் பகுதியில் தை பொங்கல் தினத்தில் இராணுவத்தினா் மீ து இளைஞா்கள் தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடா்பில் நேற்று இரவு நாகா்கோவில் பகுதியில் இராணுவத்தில் இரு இளைஞா்களை கைது செய்துள்ளனா். 

கடந்த 15ம் திகதி இரவு இராணுவத்தினருக்கும் இளைஞா்களுக்குமிடையில் உருவான வாய்த்தா்க் கம் மோதலாக மாறிய நிலையில், கிராமத்தை சுற்றிவளைத்த இராணுவத்தினா் தாக்குதல் நடாத் திய இளைஞா்களை தேடிவந்தனா். 

இந்நிலையில் இதுவரை 4 இளைஞா்களை கைது செய்திருந்த நிலையில், இன்று அதிகாலை நா கா்கோவில் கிராமத்திற்குள் நுழைந்த இராணுவத்தினா் தேடப்பட்டுவரும் பிரதான சந்தேநபாின் சகோதரனையும், நண்பனையும் கைது செய்துள்ளனா். 

இதன்போது இராணுவத்தினா் அடாவடியாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொ ண்டதுடன் கைது செய்யப்பட்ட இளைஞா்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனா். இந்நிலையில் இ ளைஞன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில்

பருத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றான். 

Radio