போராட்டத்தை நிறுத்திவிட்டு குதிக்கால் பிடரியில் அடிக்க ஓடிய யாழ்.மாநகரசபை சுகாதார ஊழியர்கள்..! இதுதான் காரணம்..

ஆசிரியர் - Editor I
போராட்டத்தை நிறுத்திவிட்டு குதிக்கால் பிடரியில் அடிக்க ஓடிய யாழ்.மாநகரசபை சுகாதார ஊழியர்கள்..! இதுதான் காரணம்..

வவுனியா- பம்பைமடு குப்பை மேட்டினை எதிர்த்து போராட்டம் நடாத்தியவர்களுக் கு வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவையடு த்து போராட்டம் நடாத்திய யாழ்.மாநகரச பை சுகாதார ஊழியர்கள் பதறியடித்து த மது போராட்டத்தை நிறுத்தி இரவோடு இ ரவாக பணிக்கு திரும்பியுள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்.மாநகரசபை சுகாதார ஊழியர்கள் கடந்த 3 நாம்களாக விடாப்பிடியாக நின்று யாழ்.மாநகரசபை வாயிலில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையிலேயே. சடுதியாக போராட்டம் நிறுத்தப்பட்டது.

பம்பைமடு குப்பை மேட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் போராட்டம் நடாத்த தடைவிதித்து நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது. கழிவகற்றல் ஒரு அத்தியாவசிய விடயம் என்ற அடிப்படையிலேயே அந்த உத்தரவு நீதிமன்றினால் வழங்கப்பட்டது.

அந்த உத்தரவினை கொண்டு யாழ்.மாநகரசபைக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் சுகாதார ஊழியர்களுக்கு எதிராக யாழ்.மாநகரசபை நீதிமன்றத்தை நாடலாம் என சிந்தித்துக் கொண்டிருந்த நிலையில் ஆபத்தை உணர்ந்து கொண்ட சுகாதார ஊழியர்கள் இரவோடு இரவாக போராட்டத்தை நிறுத்திவிட்டு குப்பை அள்ளும் பணிக்கு திரும்பினர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு