பேருந்திலிருந்து இறங்கும்போது கால்தடுக்கி பேருந்து சில்லுக்குள் விழுந்த தாயும், மகளும் பாிதாபகரமாக உயிாிழப்பு..!

ஆசிரியர் - Editor
பேருந்திலிருந்து இறங்கும்போது கால்தடுக்கி பேருந்து சில்லுக்குள் விழுந்த தாயும், மகளும் பாிதாபகரமாக உயிாிழப்பு..!

பேருந்திலிருந்து இறங்கும்போது கால்தடுக்கி பேருந்து சில்லுக்குள் விழுந்த தாயும், மகளும் பாிதாபகரமாக உயிாிழந்த சம்பவம் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. 

குறித்த சம்பவம் கிதுல்கல கோனகமுவ பகுதியில் இன்று காலை இடம்பெற்றது. அநுராதபுரம் பகுதிக்கு வழிபாட்டிற்கு செல்வதற்காக குறித்த இருவரும் 

பேருந்து ஒன்றில் வருகை தந்திருந்ததோடு  பிரிதொரு பேருந்திற்கு மாறும் சந்தர்ப்பத்தில் பயணித்த பேருந்தின் சில்லில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் தாய் மற்றும் மகள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.80 வயதுடைய தாயும் 47 வயதுடைய மகளுமே உயிரிழந்துள்ளனர்.

எட்டியாந்தோட்டை - வெலிகத்தென்ன பிரதேசத்தினை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Radio