யாழ்.குடாநாட்டில் ஒரு நாளில் 38 போ் கைது..! பொலிஸாா் குவிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சுற்றிவளைப்பு..

ஆசிரியர் - Editor
யாழ்.குடாநாட்டில் ஒரு நாளில் 38 போ் கைது..! பொலிஸாா் குவிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சுற்றிவளைப்பு..

யாழ்.குடாநாட்டில் 250ற்கும் மேற்பட்ட பொலிஸாா் பயன்படுத்தப்பட்டு நடாத்தப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடா்பட்ட நிலையில் தேடப்பட்டுவந்த 38 போ் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். 

பொலிஸ் மா அதிபரின் அறிவித்தலுக்கு அமைய நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு தேடுதல்களை நேற்று இடம்பெற்றது. அந்த வகையில் யாழ்ப்பாணத்திலும் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது இதன் போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பின் போது 19 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 12 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சிறு குற்றங்களை புரிந்த ஐந்து சந்தேகநபர்கள் 

என மொத்தமாக 38 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் பிராந்திய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட பொலிஸார் குறித்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Radio