SuperTopAds

உறவுகளின் கண்ணீரால் நனைந்த ஆட்காட்டிவெளி துயிலும் இல்லம்!

ஆசிரியர் - Admin
உறவுகளின் கண்ணீரால் நனைந்த ஆட்காட்டிவெளி துயிலும் இல்லம்!

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை 6.5 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. பண்டிவிருச்சானைச் சேர்ந்த மூன்று மாவீரர்களின் தந்தையான பொன்னுச்சாமி இராமநாதன் பொதுச் சுடரை ஏற்றினார்.

அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் உள்ளடங்கலாக ஆயிரக் கணக்காணவர்கள் கலந்து கொண்டு மலர்தூவி, ஈகைச் சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.