அமெரிக்காவுக்கு ஓடத் தயாராகும் கோத்தா!- வைரலாகும் விமானச்சீட்டு.

ஆசிரியர் - Admin
அமெரிக்காவுக்கு ஓடத் தயாராகும் கோத்தா!- வைரலாகும் விமானச்சீட்டு.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியிட்டப்பட்ட பின்னர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் 18 ஆம் திகதி அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார் என்று சிங்கள இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கோத்தபாய அமெரிக்காவுக்கு செல்வதற்கான விமானப் பயணச் சீட்டை முன்பதிவு செய்துள்ளார். எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இலக்கம் EK649 என்ற விமானத்தில் 18 ஆம் திகதி அதிகாலை 2.55 மணிக்கு இலங்கையில் இருந்து புறப்படும் அவர் அதிகாலை 5.55 மணிக்கு துபாய் செல்ல உள்ளார்.

அன்றைய தினமே இலக்கம் EK215 விமானத்தில் முற்பகல் 8.30 மணிக்கு துபாயில் இருந்து அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு புறப்பட்டு செல்ல உள்ளார். அந்த விமானம் 18 ஆம் திகதி பிற்பகல் 1.50க்கு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளது.

ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக தனக்கு நெருக்கமான அனைத்து கருத்து கணிப்புகளும் கோத்தபாய ராஜபக்ச, தேர்தலில் வெற்றி பெற இருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு சுட்டிக்காட்டியுள்ளதாக நம்பிக்கையான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோத்தபாய முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படும் விமானப் பயணச் சீட்டு சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதுடன் அவரது வேகமாக பகிரப்பட்டு வருவதாகவும் அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.

Radio