கோத்தா தரப்பினை வேவு பார்க்கவே வரதராசாப்பெருமாளை இந்தியா களமிறங்கியதா?

ஆசிரியர் - Admin
கோத்தா தரப்பினை வேவு பார்க்கவே வரதராசாப்பெருமாளை இந்தியா களமிறங்கியதா?

தனிதமிழீழத்தை பிரகடனப்படுத்திவிட்டு இந்தியா தப்பியோடிய வரதராசாப்பெருமாளை கழற்றிவிட கோத்தா தரப்பு முடிவு செய்துள்ளது.

தெற்கில் வரதராசா பெருமாளின் தனித்தமிழீழ பிரகடனத்தை ஜக்கிய தேசியக்கட்சி தூக்கி பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் சாதுரியமாக வரதராசாப்பெருமாளை கழற்றிவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசியப்பட்டியல் கதிரையொன்றை எப்படியேனும் பெற்றுக்கொள்ளவேண்டுமென்ற நப்பாசையில் வரதராசாப்பெருமாள்  திஸ்ஸ விதாரண கும்பல் சகிதம் உள்ளே நுழைந்திருந்தார்.

எனினும் சஜித் வெற்றிக்காக பாடுபடும் இந்தியா கோத்தா தரப்பினை வேவு பார்க்கவே வரதராசாப்பெருமாளை களமிறக்கியதான சந்தேகம் ஏற்கனவே மகிந்த தரப்பிடம் உள்ளது.

இந்நிலையிலேயே தற்போது வரதராசபபெருமாளை கழற்றிவிட முயற்சிகள் நடப்பதாக சொல்லப்படுகின்றது. 

Ads
Radio
×