கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

நாய்க் கூட்டிற்கு பக்கத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு இருக்கை கொடுத்த யாழ் பிரபல நிறுவனம்

ஆசிரியர் - Admin
நாய்க் கூட்டிற்கு பக்கத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு இருக்கை கொடுத்த யாழ் பிரபல நிறுவனம்

யாழ் பிரபல நிறுவனத்தில் பாதுகாப்பு சேவையிலிருந்து சென்ற பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நாய்க்கூட்டின் அருகே இருக்கை அமைத்து கொடுக்கப்பட்டது. 

நாய் மிகவும் பாதுகாப்பாக இருக்க அழகான கூடு அமைத்து அதனருகே நாயின் எச்சங்கள் கழிவுகள் நிறைந்த இடத்தில் மழைக்காலமாகிய இந் நேரம் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு இரவு முழுவதும் இருப்பதற்கு ஒரு மர ஸ்ரூலும் கொடுக்கப்பட்டது. 

இரவில் பணிபுரியும் பாதுகாப்பு உத்தியோகத்தர் மழை பனி நுளம்பு போன்றவற்றால் பாதிக்கப்படக்கூடியவாறு இந்த பிரதேசம் அமைந்துள்ளது. 

யாழ் மாநகரசபைக்குட்பட்ட இடத்தில் நுளம்புகள் பெருகியுள்ள இடத்தில் இக் கொடுமை நிகழந்துள்ளது. படங்களைப் பார்த்தால் ஒரு மனிதனுக்கு எந்த விதத்திலும் சுகாதாரமற்ற இடத்தில் 12 மணி நேரம் இரவு முழுவதும் ஒரு சாய்மானம் கூட இல்லாத இருப்பிடம் வழங்கப்பட்டுள்ளது என்பது தெரியவரும். 

பாதுகாப்பு ஊழியர்களும் மனிதர்களே! நீங்கள் ஏசி ரூம்களில் நிம்மதியாக தூங்க இரவு முழுதும் விழித்திருந்து பணிபுரிபவர்கள் அவர்கள் அவர்களை மனிதர்களாக நடத்த முடியாத இவர்களுக்கு மக்களின் தீர்ப்பே முக்கியமாகும்...

இணையதள ஆசிரியர்...

மனிதர்களை மனிதர்களாக மதியுங்கள்! அதுதான் உங்கள் நிறுவனத்துக்கும் பெருமை. உங்களுடைய நிறுவனத்தின் பெயர்களை நாங்கள் வெளியிட முடியும் ஆனால் நாங்கள் வெளியிடவில்லை. மிக விரைவில் அதை சரிசெய்து அந்த நிறுவன ஊழியர்களுக்கு நீங்கள் சரியான இருப்பிடத்தை வழங்குவீர்கள் என நாங்கள் நம்புகின்றோம்.

Radio
×