பாடசாலையில் சிரமதானத்தின்போது பாம்பு கடிக்கு இலக்கான மாணவி..! யாழ்.நகாிலுள்ள பெண்கள் பாடசாலையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor
பாடசாலையில் சிரமதானத்தின்போது பாம்பு கடிக்கு இலக்கான மாணவி..! யாழ்.நகாிலுள்ள பெண்கள் பாடசாலையில் சம்பவம்..

யாழ்.நகாில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் சிரமதான பணியின்போது மாண வி ஒருவரை பாம்பு தீண்டிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி க்கப்பட்டிருக்கின்றனா். 

குறித்த பாடசாலையில் காலையில் இடம்பெற்ற சிரமதானத்தின்போதே இவ்வாறு பாம்புக் கடிக்கு இலக்கானபோதும் சுமார் இரண்டு மணி நேரங்களின் பின்னர் மாணவிக்கு ஏற்பட்ட மாற்றம் காரணமாக ஐயம்கொண்டே வைத்தியசாலைக்கு கூட்டிச் செல்லப்பட்டார். 

அதன்பின்பு மேற்கொண்ட தேடுதலின்போது பாம்பு கடிக்கு இலக்கானமை கண்டறியப்பட்டது. இதனால் பாடசாலையில் உள்ள புற்களை பிடுங்கி அகற்றிய சமயம் இடம்பெற்ற சிரமதானத்தின்போது குறித்த பாம்பு தீண்டியிருக்கலாம் என கருதப்படுகின்றது. 

இதேநேரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி தற்போது பாதிப்பின்றி உள்ளதாக வைத்தியசாலைத் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

Radio
×