சிறிலங்காவிற்குள் நுழைய முற்பட்ட கஸகஸ்தான் நாட்டவர் நாடு கடத்தப்பட்டார்!

ஆசிரியர் - Admin
சிறிலங்காவிற்குள் நுழைய முற்பட்ட கஸகஸ்தான் நாட்டவர் நாடு கடத்தப்பட்டார்!

சர்வதேச காவல்துறையினரால் தேடப்பட்டு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட கஸகஸ்தான் நாட்டைச் சேர்ந்த நபரொருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக சிறிலங்காவிற்குள்  நுழைய முற்பட்ட போது கைதுசெய்யப்பட்டு மீண்டும் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

 குடிவரவு மற்றும் குடியகல்வு துறை அதிகாரிகளின் ஊடாக மேற்படி நபர் நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.   பொடபாயேவ் நூர்சான் 40 வயதுடையவரே இவ்வாறு நாட்டுக்குள் நுழைய முற்பட்டுள்ளார்.

 குறித்த நபர் சுமார் 15 ஆண்டுகளாக கஸகஸ்தானிலிருந்து துபாயிற்கு தப்பிச் சென்று தலைமறைவாகி இருந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இந்நபர் இன்று காலை 8.30 மணியளவில் துபாயில் இருந்து சிறிலங்கா வந்ததுள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 

Radio
×