பொதுமக்களுக்கான முக்கிய வேண்டுகோள்! -

ஆசிரியர் - Editor II
பொதுமக்களுக்கான முக்கிய வேண்டுகோள்! -

வடக்கு மாகாணத்தில் உயர் மின்னழுத்த மார்க்கத்தின் காவலிகளை சுத்தம் செய்வதற்காக ஐரோப்பாவில் இருந்து புதிதாக வடிவமைக்கப்பட்ட இயந்திரம் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

அந்தச் சேவையைப் போன்று பொதுமக்கள் எவரும் செய்ய முயற்சிக்க வேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு இலங்கை மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் எந்திரி.டி.கே.பி.யு. குணதிலக தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:

மேற்குறிப்பிட்ட இயந்திரம் மின் தடையை மேற்கொள்ளாமல் மின்சாரம் உள்ள போதே உயர் மின்னழுத்த மார்க்கத்தின் காவலிகளை சுத்தம் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.

நுகர்வோருக்குத் தடையற்ற மின்சாரத்தை வழங்கும் நோக்கோடு இந்த இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இதனூடாக மின்மார்க்கத்தின் காவலிகளை சுத்தமாக்குவதற்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பயன்படுத்தப்படுகின்றது.

இந்தத் தண்ணீர் சுன்னாகம் மின்சார நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இயந்திரங்களினூடாகவே பெறப்படுகின்றது.

அதுமட்டுமன்றி சுத்திகரிப்பாளர்கள் உரிய பாதுகாப்பான முறையை மேற்கொண்டே பணியில் ஈடுபடுத்தப்படுகின்றார்கள்.

எனவே, அனைத்து மின்பாவனையாளர்களுக்கும் விடுக்கப்படும் வேண்டுகோளானது, உயர் மின்னழுத்த மார்க்கங்களுக்கு அருகாமையிலோ அல்லது அவற்றைத் தொடுகையுறும் வகையிலோ எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் என்றுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு