வடக்கு மாகா­ணத்­தில் உள்ள பாட­சா­லை­க­ளில் ஆசி­ரி­யர்­கள் அலை­பேசி பயன்­ப­டுத்­த தடை..

ஆசிரியர் - Editor II
வடக்கு மாகா­ணத்­தில் உள்ள பாட­சா­லை­க­ளில் ஆசி­ரி­யர்­கள் அலை­பேசி பயன்­ப­டுத்­த தடை..

வடக்கு மாகாண பாட­சா­லை­க­ளில் ஆசி­யர்­கள் மாண­வர்­க­ளின் முன் அலை­பேசி பயன்­ப­டுத்­து­வதை தவிர்க்க வேண்­டும் என்று மாகாண கல்வி அமைச்சு அறி­வித்­தல் வழங்­கி­யுள்­ளது.

கல்வி அமைச்­சில் இறு­தி­யாக நடை­பெற்ற திணைக்­கள தலை­வர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லில் தெரி­விக்­கப்­பட்­டது என அமைச்­சின் கூட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது.

வடக்கு மாகா­ணத்­தில் உள்ள பாட­சா­லை­க­ளில் மாண­வர்­கள் அலை­பேசி பயன்­ப­டுத்­தக் கூடாது. அது தொடர்­பில் மாண­வர்­கள் கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றார்­கள். அதே­வேளை ஆசி­யர்­கள் பாட­சா­லை­க­ளில் அலை­பேசி பயன்­ப­டுத்­து­கி­றார்­கள். இத­னால் சில நேரங்­க­ளில் கற்­றல் நட­வ­டிக்­கை­கள் பாதிக்­கப்­ப­டு­கின்­றன.

ஆனால் அலை­பேசி என்­பது அனை­வ­ருக்­கும் தேவை­யான பொரு­ளாக மாறி­வ­ரு­கின்­றது. ஆகவே தேவை ஏற்­ப­டின் ஆசி­ரி­யர்­கள் அவர்­க­ளது ஓய்வு அறை­யில் பயன்­ப­டுத்­த­லாம் என்று தெரி­விக்­கப்­பட்­டது

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு