ஈழத் தமிழ்க் குடும்பத்தை நாடுகடத்துவதற்கு எதிராக 2 இலட்சம் கையெழுத்துகள்!

ஆசிரியர் - Admin
ஈழத் தமிழ்க் குடும்பத்தை நாடுகடத்துவதற்கு எதிராக 2 இலட்சம் கையெழுத்துகள்!

அவுஸ்ரேலியாவில் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள ஈழத்தமிழ் குடும்பத்துக்கு ஆதரவாக சுமார் 2 இலட்சம் வரையான கையெழுத்துக்கள் திரட்டப்பட்டு, அந்த நாட்டு குடிவரவு அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

அவுஸ்ரேலியாவின் பிலோலா சமூகத்தினர் இந்த கையெழுத்து திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்ததோடு, நேற்று முன்தினம் குறித்த கையெழுத்துக்கள் அடங்கிய ஆவணம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மெல்பனில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களான நடேசலிங்கம் – பிரியா குடும்பம் தம்மை அவுஸ்ரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், அவர்களை நாடுகடத்தக்கூடாது என்று வலியுறுத்தி 190,000 கையெழுத்துக்கள் திரட்டப்பட்டு குடிவரவு அமைச்சர் டேவிட் கொல்மனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு